என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அண்ணன் கொலை"
கோபி வாய்க்கால்மேடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 22).
திருமணம் ஆகாத இந்த வாலிபர் இரு சக்கர வாகன மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தனது வீட்டின் அருகே ஒரு மரத்தடியில் மயில்சாமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் காணப்பட்டது. தலையில் கல்லை போட்டு கொன்றதாக கூறப்பட்டது.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமியும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக் தகவல் வெளியாகி உள்ளது. வாலிபர் மயில்சாமியை அவரது தம்பியே கொலை செய்தது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட மயில்சாமியின் தம்பி பெயர் யோகேஸ்வரன் (19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். இவரிடம் மயில்சாமி அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
மேலும் யோகேஸ்வரன் கொண்டு வரும் சம்பளப் பணத்தையும் மயில்சாமி வாங்கி கொண்டு போய் விடுவாராம். மேலும் மோட்டார் சைக்கிளையும் கேட்பாராம். இதனால் அண்ணன் தம்பி இடையே தகராறு தொடர்ந்து இருந்தது.
சம்பவத்தன்றும் அவர்களின் வீட்டு முன்பு உள்ள மரத்தடியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த யோகேஸ்வரன் அண்ணன் மயில்சாமியை பிடித்து தலையை மரத்தில் மோத வைத்தார். மேலும் அருகே ஒரு பெரிய கல் கிடந்தது. அந்த கல்லிலும் அண்ணனின் தலையை மோதச்செய்தார்.
இதில் மயில்சாமியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பாலத்தோட்டனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த சித்தப்பா மகன்கள் மாதேஷ் (வயது 28), கிருஷ்ணா (21). இவர்கள் 2 பேரும் விவசாய கூலி வேலை செய்து வந்தனர்.
இதில் கிருஷ்ணா வேலை செய்யாமல் அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளார். அண்ணனிடம் அடிக்கடி பணம் கேட்டு வாங்கி செலவு செய்து வந்தார். நேற்று இரவு குடிப்பதற்காக பணம் கேட்டார். ஆனால் மாதேஷ் பணம் கொடுக்கவில்லை. இதனால் அண்ணன், தம்பி 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கத்தி எடுத்து வந்த கிருஷ்ணா மாதேசை குத்தினார். உறவினர்கள் தடுத்து கத்தியை பிடுங்கினார்கள். ஆத்திரம் தீராத கிருஷ்ணா அரிவாளை எடுத்து வந்து அண்ணனின் தலையில் பின்பக்கம் அடித்தார். இதில் அவர் சுருண்டு விழுந்தார்.
பின்னர் அங்கிருந்து கிருஷ்ணா தப்பி ஓடிவிட்டார். சுருண்டு விழுந்த மாதேசை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இந்த கொலை குறித்து தளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து கிருஷ்ணாவை தேடி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள செம்பியன் கோவில் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (39). இவரது தம்பி கஜேந்திரன் (29). இவர்கள் இருவரும் பெருந்தொழுவு மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று மாலை வேலை முடிந்து இருவரும் வீடு திரும்பினார்கள். அப்போது வழியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார்கள்.
பின்னர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிற்கு வந்த பின்னரும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை அவர்களது தந்தை சுப்பிரமணி கண்டித்தார். ஏன் இருவரும் சண்டை போட்டு கொள்கிறீர்கள் என சத்தம் போட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் தனது தந்தையை அடிக்க பாய்ந்தார். இதனை ரமேஷ் தடுத்தார். அப்போது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கஜேந்திரன் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து தனது அண்ணன் ரமேஷ் தலையில் தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரமேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர்.கொலை செய்யப்பட்ட ரமேசுக்கு பூங்கொடி என்ற மனைவியும், சுதாகர் (12) என்ற மகனும் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்